Monday, 2 September 2013

விஜய்சேதுபதியின் 'மணி' சென்டிமென்ட்!

.
எத்தனை படங்களில் கமிட் ஆனோம் என்று விஜய் சேதுபதியே மறந்துவிடும் அளவுக்கு லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது.

'பண்ணையாரும் பத்மினியும்', 'ரம்மி', 'வசந்தகுமாரன்', 'சங்குதேவன்', 'புறம்போக்கு', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', சீனுராமசாமி இயக்கும் படம் என்று பிஸியாகவே இருக்கிறார் விஜய் சேதுபதி.

இந்தப் படங்களில் நடித்துமுடிக்க எவ்வளவு வருடங்கள் ஆகும் என தெரியாது. இப்போது 'வன்மம்' எனும் இன்னொரு புதுப்படத்தில் நடிக்கிறார் சேதுபதி.

நேமிசந்த் ஜபாக் புரொடக்ஷன் தயாரிக்கும் 'வன்மம்' படத்தை ஜெய்கிருஷ்ணா இயக்குகிறார். விஜய் சேதுபதி நடிக்கும் முதல் ஆக்‌ஷன் படம் என்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தனை படங்களில் கால்ஷீட் சொதப்பல் இல்லாமல் எப்படி நடிக்க முடிகிறது என்று விஜய் சேதுபதியிடம் கேட்டால், கழுத்தில் அணிந்திருக்கும் சின்ன மணியைக் காட்டி சிரிக்கிறார். அந்த மணியை அணிந்த பிறகு எந்த பிரச்னையும் இல்லாமல் பட வாய்ப்புகள் குவிகிறதாம்.

தன் படங்கள் வரிசையாக ஹிட்டாவதற்கும், அந்த மணிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே விஜய் சேதுபதி நம்பிக்கொண்டு இருக்கிறார்

No comments:

Post a Comment