Saturday, 31 August 2013

All Heros Must Follow Vijay Sethupathi – Balaji Sakthivel



விஜய் சேதுபதி, நந்திதா, ஸ்வாதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதி, இயக்குனர் கோகுல், இசையமைப்பாளர் சித்தார்த், தேவயானி பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வந்த அனைவரும் படத்தை வாழ்த்தி பேசினார்கள். விழாவில் ‘காதல்’ பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் கூறியதாவது:-
இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் விஜய்சேதுபதியை பற்றி சிலர் பேசும்பொழுது, அவர் சரியான இயக்குனர்களை தேர்வு செய்கிறார். மேலும், ஸ்கிரிப்டை முழுவதும் படித்து அதில் ஆட்சேபனை இருந்தால் உடனே அதை பற்றி இயக்குனரிடம் நேரடியாக பேசுகிறார். அவர் கஷ்டப்பட்டு சினிமாவில் முன்னணிக்கு வந்தவர். அதனால் அவரது கேரியரை சரியான திசையில் கொண்டு செல்கிறார். விஜய்சேதுபதியை மற்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment